இலக்கியங்களும் இனிமைகளும் என்று மாறாதவை

கட்டுரைகள் பொது கட்டுரைகள்

Posted by admin on 2021-06-30 18:30:00 | Last Updated by admin on 2024-05-12 17:45:28

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 231


இலக்கியங்களும் இனிமைகளும் என்று மாறாதவை

கி.பி 250 - கி.பி 600 

இலக்கியங்களும் இனிமைகளும் என்று மாறாதவை


(கி.பி. 250 - கி.பி. 600)

பாண்டிய தலைநகர் மதுரையில் நடைபெற்ற கடைச்சங்கத்தின் இறுதிகாலத்திற்கு பின் சைவ சமய குரவர்கள் திருநாவுகரசர், சம்பந்தர் தோன்றிய காலத்திற்கு பின் ஓர் காலப்பகுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கூறப்படுகிறது. கி.பி. 250 முதல் கி.பி. 600 வரை ஒரு காலப்பகுதி மதுரை கடைச்சங்கம்.


இருண்ட காலத்தில் சில தமிழ் நூல்கள் தோன்றியவை அற்புத திருவந்தாதி இரட்டைமணி மாலை திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருமந்திரம், ஆகிய நீதி நூல்கள் தமிழிலில் இயற்றப்பட்டுள்ளது. சேர சோழ பாண்டிய நீதி நூல்கள் எழதபெற்றன.

நான் மணிகடிகை 104 பாடல்களை தன்னகத்து கொண்ட நீதிநூல் ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு உண்மை பொருள்கள் சொல்;லப்பட்டிற்கும் வெண்பா யாப்பில் ஆசிரியர் தொல்காப்பியனார் எண்வகை நூலை வனப்புகளில் அண்மை பேராசிரியர் நச்சினாற்கினியார் உரையாசிரியர் குணசாகர் பேராசிரியர் நச்சினார்கனிபர் குறிப்பிடுவார். நான்மணிகடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார் ஆவார். விளம்பி என்னும் ஊரில் பிறந்தார். வைணவ சமயத்தினர் நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து பாடல்கள் இரண்டினாலும் தௌ;ளிதிற் புலனாகிறது. இனி ஊனுண்டல் - செய்யாமை செல்சாயிர்க்கு எனவும் ‘இனிதுண்பாடுனன்பான் உயிர்கொல்லார் துண்பான்’ எனவும் விலைப்பாலிற் கொண்டூர் மிசைதலும் குற்றம் எனவும் கொலைப்பாலுங் குற்றமேயாம் எனவும் கூறி இருப்பதை நோக்குமிடத்து புலாலூண்ணாமை, கொல்லாமை ஆகியவை தலைசிறந்த இரு பேரறங்கள் ஆகும்.

இன்னா நாற்பது:

கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பா உரிய நீதிநூல் ஆகும். இன்னது இன்னது துன்பம் பயக்கும் என்று கூறுவதாகும். இது இன்னா நாற்பது என்று பெயர் பெற்றது. பதிணென் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று இன்னிசை வெண்பாக்களால் ஒரே கருத்து வெவ்வேறு பாடல்களில் இவருடைய நூலில் காணலாம். கடவுள் வாழ்த்து பாடல் சிவபெருமான் பலராமன் மாயோன் முருகவேல் நால்வரையும் குறித்து உள்ளது. பதினோறாம் திருமறையில் மூத்த நாயனார் திருவிடத்தை மணிமாலை சிவபெருமான் திருவந்தாதி என்ற மூன்று நூல்களில் பாடியுள்ள கபிலதேவநாயனார் பல்லவர் ஆட்சி காலத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த வேற ஒரு புலவர் ஆவார். இன்னா நாற்பது பாடிய கபிலர் இரட்டை மணிமாலை அந்தாதி இயற்றிய கபில தேவ நாயனாரும் வெவ்வேறு கால புலவர்கள் ஆவார்கள். 


இனியவை நாற்பது:

நாற்பத்தியொரு வெண்பாக்களால் ஆன நீதிநூல் கடவுள் வாழ்த்து உட்பட ஒவ்வொரு பாடலும் இன்னது இன்னது இனியவை என்று இனியவை நாற்பது என்று பெயர் பெற்றன. பதிணென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று ஆசிரியர் தொல்காப்பியரால் கூறப்பட்டுள்ள அம்மை எனும் வனப்பு அமையபட்டுள்ளது.


கபிலர் இன்னா நாற்பதில் கூறியுள்ள ஊணைத் தின்றூனைப் பெருக்குதல் முன்னின்னா கல்லாருரைக்குங் கருமப் பொருளின்னா குழவிகளுற்ற பிணியின்னா என்னுந் தொடர்களோடு இவ்வாசிரியர் இனியவை நாற்பதில் கூறியுள்ள ஊரைத் தின்றுளைப் பெருக்காமை முன்னினிதே. கற்றறிற்தார் கூறுங் கருமப் பொருளினிதே. குழவி பிணியின்றி வாழ்தலினிதே என்ற தொடர்கள் சொல்லாலும் கருத்தாலும் ஒற்றுமையுடையனவாய் அமைத்திருத்தல் காண்க.


திரிகடுகம்:

கடவுள் வாழ்த்து உட்பட நூறு வெண்பாக்கள் உடையது. ஒவ்வொரு பாடலும் மக்கள் நலன் கருதி மும்மூன்று உறுதிபொருட்களை ஒவ்வொரு வெண்பாலிற்கும் மூன்று அடி ஈற்றுசீர் மூவர் தொகையை குறிப்பிடுகின்றன. திரிகடுகம் என்ற தொடர் சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் குறிக்கும். மருந்து உடல் நோயை நீக்கி மக்களுக்கு நலன் புரிவதுபோல திரிகடுகம் நூல் ஆசிரியருக்கு கருத்தை கூறுகிறது. ஆசிரியர் நல்லாதனார் தென்பாண்டி நாட்டு திருநெல்வேலியை சார்ந்த திருத்து என்னும் ஊரில் உள்ள பழம் பாடல் கூறுவது பொருத்தமுடையது ஆகும். கடவுள் வாழ்த்து பாடலில் திருமாலின் திருவடிகள் ஞாலம் அளந்தமை குருத்தஞ்சபப்த்தமை, சகடம் உதைத்தமை ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தியதைப் பாராட்டியிருத்தல் அறிந்து மகிழ்தற்குரியதாகும். இவர் நூலுக்கு வடமொழி வைத்துள்ளதால் கனட சங்கத்திற்கு பிறகு தோன்றியவர் ஆவார். இவர் திருக்குறளை பயின்றும் இனியவை நாற்பதும் கற்று இந்நூலை படைத்துள்ளார். இந்நூல் பதிணென் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. இவரின் வாழ்க்கை வரலாறு புலப்படவில்லை.


ஆசாரக்கோவை:

கடவுள் வாழ்த்தோடு நூறு பாடல்களை உடையது குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகிய வெண்பா வகைகள் காணப்படுகின்றன. இது ஒவ்வொரும் தன்வான் நாளில் கடைபிடிக்க ஒழுக்கங்களும் விளக்கத்தின் செயல்களும் கூறப்பட்டுள்ளன. உலகில் நன்கு உணர்ந்து உயர் நிலையை எய்தர் விரும்பிடுவார் தெரிந்தக் கொள்ள செய்திகள் உள்ளன. இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் ஆவார். இவர் புதுக்கோட்டை நாடு குளத்தூரில் உள்ளது என அறியப்படுகிறது. நன்றியறிதல் பொறயுடைமை இன்சொல் கூறல் எவர்க்கு யின்னா செய்யாமை கல்வி ஒப்புரவு ஆற்றல் அறிவுடமை நல்லனத்தாரோடு நாட்டல் என்று கூறப்படுகிறது.


பழமொழிகள்:

கடவுள் வாழ்த்து உட்பட நானூறு வெண்பாக்களை உடைய நீதி நூல். பழமொழி பெயர் பெற்று திருக்குறள் நாலடியார் ஆகிய நீதிநூல் கருத்துக்கள் தமிழ் மக்களின் பண்டைய நாகரிகம், சேர, சோழ, பாண்டிய அரசுகளின் சேதிகளும் இதிகாசம், புராணங்கள், கதைகளும் இந்நூலில் காணப்படும். பல்யானைச் செல்கெழகுட்டுவன், மனுநீதி கண்ட சோழன் தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன், சோழன் கரிகாலன் பொற்கைப் பாண்டியன் பாரி பேகன் ஆகியோரிடம் வரலாற்றில் குறிக்கப்படுதற்குரிய சில செய்திகள் இந்நூலில் காணப்படுகிறது. இதன் ஆசிரியர் மூன்றுறையரையர் என்பர். இவர் பெயரிலிருந்து பாண்டி நாட்டிலிருந்த ஓர் அரசியல் தலைவராக இருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இவர் அருகக் கடவுளுக்கு வணக்கம் கூறி இருப்பதால் இவர் சமண சமயத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இலக்கியங்கள், வழக்காற்றிலாதல் இருந்திருத்தல் வேண்டும் அதிலிருந்து இவர் சான்றுடன் கூறியுள்ளார். தொன்மை வாய்ந்தது இவரது நூல்.


சிறுபஞ்ச மூலம்:

இந்நூல் சிறப்புப் பாயிரப் பாடல்கள் இரண்டும் நூற்று நான்கு பாடல்களை உடைய ஒவ்வொரு பாடலும் மக்கள் வாழ்க்கைக்கு பயன்படும் - ஐந்தைந்து பொருள்களை கூறுகின்றது. கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறமல்லி, பெருமல்லி நெருந்சி ஆகிய 5 - வேர்கள் சிறந்த மருந்தாகி மக்கள் உடல் பினையை மருத்துவ நூலி;ல் உண்மை. இதன் ஆசிரியர் காரியாசான் சைன சமயத்தினர். அவருடைய பாயிரப் பாடரால் நன்குணரக் கிடைக்கும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காலனார். கி.பி. 470 - வச்சிரந்தி சமண முனிவர் தமிழ்ச்சங்கம் நல்லாசிரியராக மாக்காயனார் இருத்தல் அவசியம். சிறுபஞ்சமூலத்தின் செந்தமிழ் தேற்றான் கவிசெல்லும் - நாககமே நாடின் நகை ஆசிரியர் செந்தமிழ்ப் புலமையும் தூய விரிந்த உள்ளமும் நூல். தம் நூலில் தானத்தாற் போகம் தவத்தால் சுவரக்கமாம் - ஞானத்தால் வீடாகும் நாட்டு - துள்ளமைலால் மெய்யுணர்தல் ஒன்றால் தான் வீடு - பேற்றை - எய்தலாம். ஆசிரியர் என்று மக்களால் பாராட்டப் பெற்று பெருடையுடையவர் என்பதாகும்.



ஏலாதி:

கடவுள் வாழ்த்;தோடு எண்பத்தொரு பாடங்களை ஒரு நீதி நூல், இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் ஏலம் - இலவங்கப்பட்டை, இரண்டு பங்கும், தாககேசரம் மூன்று பவீரும் மிளகு நான்கு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும் சுக்கு ஆறு பங்கும் சேர்த்து பெற்ற ஏலாதி சூரணம் மக்களுக்கு நோய் தீர்ப்பது போல் இதன் கருத்துக்கள் வாழ்விற்கு வளம் சேர்ப்பதால் ஏலாதி என்று பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் கணி மேதாவியார் ஆவார். ஒளரதன் கேத்திரசன் கானினன், கூடன், கிரதன், பௌநற்பலன், தத்தன், ககோடன், கிருத்திரமன், புத்திரபுத்ரன், அபவித்தன், உபகிருதன் தேவாதிதேவன், வைசிரவண்ணன் ஆகிய வடமொழிப் பெயர்களை இவர் எடுத்தாண்டிருத்தலால் அம்மொழிப் பயிற்சியும் இவருக்கு இருத்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இவர் தொண்டு என்னுஞ் சொல் ஒன்பது என்று பொருள்படுமாறு அதனை ஏலாதியிலுள்ள ஒரு வெண்பாலில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


கார்நாற்பது:

நாற்பது வெண்பாக்கள் உடைய முல்லை திணையின் அகவொழுக்கத்தை கூறுவது. 

காலம் இடம் பொருள் கருதி நாற்பான்

சால வுரைத்தல் நானாற்பதுவே எனும் நூற்பா படி காலத்தை பற்று கூறும் நூல் ஆகும்.


தோழி, தலைமகள,; தலைமகன,; பாடகன் கூற்றுகளை வரலாற்றின் நூலாசிரியர் கூறுவது குறிப்பிடதக்கது. இந்நூலின் ஆசிரியர் மதுரை கண்ணன் கூத்தனார். மதுரை நகரில் வாழ்ந்த இவருடைய தந்தையார் கண்ணானர் என்ற பெயர் உடையவர் இவரின் இயற்பெயர் கூத்தனார். இவர் இயற்றிய வேதநூல் செய்யுள் இக்காலத்தில் கிடைக்கவில்லை. பதிணென் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. கடைச் சங்க காலத்திற்கு பிற்பட்ட இருண்டகாலம் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்று கூறப்படுகிறது. திணை மாலை நூற்றம்பைது ஐந்தினை எழபது குறிப்பிட்ட நூல்களுக்கு காலத்தால் முற்பட்டது. இந்நூலின் சிறப்பு ஆகும்.


ஐந்திணை ஐம்பது

ஒவ்வொரு திணைக்கு பத்து பாக்கள் வீதம் உள்ளது. இதனால் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது. அகத்திணை ஐந்து ஒழுக்கங்களை கடுங்க சொல்லி செய்யுளில் பலநேரிசை வெண்டாக்களும் இன்னிசை வெண்பாக்களும் உடையது. பதிணென் கீழ் கணக்கு நூல்களில் ஒன்று ஆசிரியர் மாறன் பொறயைனார் மாறன், பொறையன் என இரண்டு பெயர்களும் சிறப்பு பெயராக சிலர் கூறுகின்றனர்.


திணைமொழி ஐம்பது:

திணை ஒன்றிற்கு பத்து பாக்கள் வீதம் ஐந்திணைக்கு ஐம்பது பாக்கள் உடையது. ஐம்பது பாடல் நாற்பத்தாறு இன்னிசை வெண்பாக்களும் நான்கு நேரிசை வெண்பாக்களும் பதிணென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் கண்ணன் சேந்தனார். இவர் சத்தனந்துதையாரின் புதல்வர் சைவம் வைணவம் இடுபெருப் நெறிகளில் ஒன்றை கைசாண்டலர் இந்நூல் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற நூல் என்று உணர முடிகிறது.


ஐந்திணை எழுபது:

திணைக்கு பதினான்கு பாடல் வீதம் எழுபது பாடல்கள் வீதம் உள்ளதால் இது ஐந்திணை எழுபது என்று பெயர் பெற்றது. ஐந்திணை ஐம்பது போல் அசப்பொருள் கருத்துக்களை உடையது அதனால் கற்போரை கவரக் கூடியது. இதன் ஆசிரியர், மூவாதியார் ஆவார். இவரை பற்றிய குறிப்புகள் இந்நூலில் இடம் பெறவில்லை. இவர் மாறன் பொறையனார் காலத்துக்கு முற்பட்டவர் ஆவார் என்று கருதப்படுகிறது.


திணைமாலை நூற்றறெம்பது:

இது மூன்று வெண்பாக்கள் உடைய ஒரு நூல். குறிஞ்சி திணைக்கு முப்பத்தொரு பாடல்கள், நெய்தலுக்கு முப்பத்தொரு பாடல்கள், பாலைதிணைக்கு முப்பது பாடல்கள,; முல்லைத் திணைக்கு முப்பத்தொரு பாடல்கள,; மருத திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றம்பத்து மூன்று பாடல்களை தன்பால் கொண்டது. இந்நூல் பதிணென் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் கணி மேதாவியார். இவர் ஏலாதி நூலுக்குப் ஆசிரியர் ஆவார். அலசம் உருளம் சுவாசம், அலங்காரம், வடசொல்லிற்கு தன் நூலில் எடுத்துகாட்டும் கடை சங்க காலத்திற்கு பிந்தைய நூல் என்ற உறுதிபடுததப்பட்டுள்ளது.


கைந்நிலை:

இஃது அறுபது வெண்பாக்களையுடைய ஒரு நூல் ஐந்திணைக்குரிய அகவொழுக்கத்திற்கு இலக்கியமாய் அமைந்தது. எனவே ஒவ்வொரு திணையும் பன்னிரண்டு பாடல்களை உடையதாகும். இந்நூல் பதிணென் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் மாறோகத்து முள்ளிநாட்டு நல்லுர்க் காவிரியார் மகனார் புல்லங்காடனார். இவரது ஊரானது தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் ஆகும். இந்நூலில் பாசம், ஆசை, இரசம், கேசம், இடம், உத்தரம் ஆகிய வடசொற்கள் வருவதால் இது கடைசங் காலத்திற்கு பின் தோன்றிய நூல் ஆகும்.


காரைக்காலம்மையார் நூல்கள்:

காரைக்காலம்மையார் இயற்றிய பதினோராந் - திருமுறையில் காணப்படும் நூல்கள் நான்கு. அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டும், அற்பதந்திருவந்தாதி நூற்றொரு வெண்பாக்களை திருவிரட்டை மணிமாலை, வெண்பா கட்டளை கலித்துரை இருபது பாடல்களை கட்டளை கலித்துரை அந்தாதி தொடையில் அமையும். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்னும் திருட்பதியில் அண்டமுற பதிகம் காரைக்கால் காலம்மையார் தம்மை காரைக்காற்பேய் இரண்டு பாடல்களையும், வரலாறு, திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணத்தில் சேக்கிழாராடிடனர், 12-நூற்றாண்டின் 60 பாடல்களை வரலாற்றில் காணப்படும்.


காரைக்கால் அம்மையார் சோழ மண்டலத்தில் கீழ் கடலைச் சார்ந்த புனிதவதி என்னும் பெயருடைய இரு மாங்கனிகள் உண்ட சிவனடியார்கள் இன்புறும் பெருநிலை எய்தினார். சேக்கிழார் பெரும் புராணத்தில் கூறியுள்ளனர். திருஞான சம்பந்தர் முற்பட்டவர் காரைக்காலம்மையார் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இருண்ட காலப் பகுதியில் இவ்வமையார்.

1. அற்புதத் திருவந்தாதி

2. இரட்டை மணிமாலை

3. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்.


நான்கு நூல்களை கி.பி. 5-6 நூற்றாண்டில் ஒரு தலை, இந்நூல்களில் இவ்வமையாற் ஆன்ளெ;ள சங்கரன் வேதியான், உமை, அரன், ஈசன் இயமானன், சேமம் கணம், ஆரம், அந்தரம், சிரம், சோதி, கமலம், சிரமம், அந்தி சரணார வந்தம் அட்ட மூர்த்தி, ஞானமயர், அந்தாதி ஆகிய வடசொற்கள் தொடர்புகள் அற்புதத் திருவந்தாதி நூற் பெயரும் இந்நூல்கள் தோன்றியிருக்கின்றன என்றே கூறலாம்.


திருமந்திரம்:

மூவாயிரம் பாடல்கள் சைவ திருமறைகள் பன்னிரண்டுகள் பத்தாவது திருமுறையாகும் ஒவ்வொரு தந்திற்கும் பல அதிகாரம் கொண்டது. இருநூற்று முப்பத்திரண்டு அதிகாரம் வரலாற்றில் கிடைத்தது. திருவலங்காட்டில் கோவில் பலிபீடத்தில் செப்பேடு வடிவில் திருஞானசம்பந்தருக்கு கிடைத்தது. இந்நூலின் ஆசிரியர் திருமூலநாயனார் ஆவர். இந்நூலில் மூவாயிரத்து எழுபத்துதொரு பாடல்கள் உடையது. திருமந்திரத்தில் மூவாயிரத்து நாற்பத்தேழு பாடல்களும் சைவ சித்தாந்த மகா சமயத்தாயின் இருபத்து நான்கு பால்களும் சேர்க்கப்பட்டுள்ளது. சைவ சித்தார்ந்த உண்மைகளை கூறுகின்றது.


முத்தொள்ளாயிரம்:

மூவேந்தர்களை பாட்டுடை தலைவனாக கொண்ட அறம,; பொருள், இன்பம் புகழ்ந்து பாடப்பெற்ற பழமையான தமிழ் நூல் வெண்பா யாப்பில் அமைந்தது. இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் மூவேந்தர்களை சிறப்பித்து கூறுதலால் முத்தொள்ளயிரம் ஆகிறது. புறத்தீரத்து தொகை இக்காலத்தில் கிடைத்துள்ளது. இச்செய்யுள்கள் தொகுத்து மதுரை  தமிழ்சங்கம் வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர் கடைச்சங்க புலவர் அல்லர். முத்தொள்ளாயிரம் அருமை பெருமை தனிசிறப்புகளையும் உணர்த்துகிறது.


கிளிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம்:

முற்காலத்தில் மூன்று நூல்கள் இருந்தன. வீரசோழிய யாப்பு படலம் இருபத்தொறாப் பாடல் உறையில் எலிவிருத்தம், நரிவிருத்தம், இனி விருத்தக் கலித்துறைகளில் உள்ளன. உரையாசிரியர் பெருந்தேவனார். இவ்விருத்த நூல்களில் எலிவிருத்திற்கு திருநாவுகரசர் திருஞானசம்பந்தர் அருள் பாக்களலில் புலனாகிறது. இதன் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு திருத்தக்கதேவரால் இயற்றப்பட்டது. நரிவிருத்தம், கிளி விருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம் நூல்கள் கிடைக்காததால் வரலாற்றை அறிய முடியவில்லை. சமண சமய கொள்கையை கூறும் சைண நூலாக இருக்க வேண்டும் இந்நூல். இந்நூலில் வழக்கில் இல்லை என்றாலும் இருண்ட காலப் பகுதியில் புலப்பட்ட சில செய்திகள் கூறுகிறது. 


முடிவுரை:

இஞ்ஞான்றும் பதிணென்கீழ்கணக்கு நூல்களின் முக்கிய செய்திகளை இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது. உலகில் சில விண்ணைவிட, மண்ணைவிட, இனிமையைவிட, இன்றியமையாத இலக்கிய வரலாற்றில் இடம்பிடிப்போம். ஆய்வாளர்களாக அல்ல சாதனையாளராக சரித்திரப் படைப்போம்.

  

M.A.,Tamil.,M.A.,Ling.,M.A.,

Eng.,M.Phil.,TPT.,PGDCA., Phd.,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி,

தமிழ்; பல்கலைக் கழகம்,

தஞ்சாவூர் - 01.

செல் : 9585807682



Search
Leave a Comment: