Welcome to Vidhai - International Tamil E-Journal
Vidhai Header

பண்டையத் தமிழர்களின் நாட்டுப்புறக்கலைகள்

Articles Seminar Articles
பண்டையத் தமிழர்களின் நாட்டுப்புறக்கலைகள்

முனைவர்.கொ.பரிமளம்

உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி

கோயமுத்தூர்

மின்னஞ்சல் முகவரி : parimalamtamil@srcw.ac.in

கைப்பேசி எண் : 9003715472


முன்னுரை

நாட்டுப்புறகலைகள் மனிதர்களி;ன் உணர்வுகளின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. நாட்டுப்புறக் கலைகள் என்பது மக்கள் மனமகிழ்வோடு வாழ்வதற்கான ஊன்று கோலாக அமைந்துள்ளன. அறிவியலின் அசுர வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்வியல் இயந்திரமயமாகி விட்டது. வரலாற்றில் அழியாச் செல்வங்களாக விளங்கும் நமது பண்டைய தமிழர்களின் கலைகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதன் மூலம் வளமான சமுதாயமாக உருவாக்க முடியும்.


நாட்டுப்புறக்கலைகள்

நாட்டுப்புறக் கலைகள் பண்டையத்தமிழர்களின் வாழ்வியலை சிறப்பித்தவைகள் ஆகும். சிலம்பாட்டம், கோலாட்டம், வில்லுப்பாட்டு, கும்மியாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தெருக்கூத்து, ஒயிலாட்டம், பாம்பாட்டம், உறுமியாட்டம், புலியாட்டம், பறையாட்டம், கரகாட்டம், மாடுஆட்டம், உறியடி ஆட்டம், கொல்லிக்கட்டை ஆட்டம், குறவன்குறத்தி ஆட்டம், தேவராட்டம், தப்பாட்டம், காளியாட்டம், சேவையாட்டம், பேயாட்டம், சாமியாட்டம், சாந்திகூத்து, மெய்க்கூத்து, அபிநயக்கூத்து, நாட்டுக்கூத்து, விநோதக்கூத்து, குரவைக்கூத்து, கழாய்க்கூத்து, பார்வைக்கூத்து, வசைக்கூத்து, சாமியாட்டம், பொம்மலாட்டம் ஆகிய எண்ணிலடங்காத கலைகள் தமிழரின் வரலாற்றில் அடங்கியுள்ளது.


சிலம்பாட்டம்

சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். திருக்குறளில் “கோல்” என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், “வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே” என்ற வரிகள் மூலம், “தண்டு” என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.


சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.


கும்மியாட்டம்

தமிழகத்தின் தொன்மையானக் கலைகளுள் “கும்மி” எனப்படும் கும்மியாட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கைகளின் ஓசையை மட்டுமே இசையாகக் கொண்டு உருவான ஒருவகை நடனக்கலையே கும்மியாகும். எனவே, இது இசைக் கருவிகள் தோன்றும் காலத்திற்கு முன்னரே உருவான கலையாக அறியப்படுகிறது. தமிழகத்தில் பரவலாக அறியப்படும் இந்தக் கலை கேரளத்தில் ‘கைக்கொட்டிக்களி’ மற்றும் ‘திருவாதிரைக்களி’ என்ற பெயர்களில் வழங்கி வருகிறது. கும்மி என்ற கலையின் தொன்மையை சங்க இலக்கியங்களில்சுட்டப்படுவதில் இருந்து அறியலாம். “குரவை ” என்ற ஆதி கலையின் பிரிவாக அறியப்படும் கும்மி என்ற கலை, “கொம்பை ” என்ற பெயரில் அகநானூறு, குறுந்தொகை முதலிய சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக கும்மியடித்தல் என்பது பெண்கள் மட்டும் பங்கேற்கும் நடனக்கலை போன்றே தோன்றினாலும், தமிழகத்தின் சில பகுதிகளில் ஆண்களும் இதில் பங்கு பெறுவதுண்டு. குழுவில் ஒரு பெண் அடியெடுத்துப் பாட, மற்றவர்கள் பின்பாட்டு பாடுவார்கள். அந்தப் பாடலின் மெட்டுக்கேற்ப, கைகளைத் தட்டி, தாளம் எழுப்பி, வட்டமிட்டு ஆடி வரும் வகையில் இன்று கும்மி பரவலாக அறியப்படுகிறது. மேலும், கும்மியடித்தலுக்கென்றே தனியாக கும்மிப் பாட்டு செவிவழியாக ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு சொல்லப்பட்டு, மக்களால் பாடப்பட்டு வருகிறது.


ஓயிலாட்டம்

ஒயில் என்னும் சொல்லுக்குஒய்யாலும், அழகு, அலங்காரம் போன்றபொருள்கள் உண்டு. ஒய்யாலும் என்றசொல் கம்பீரம், எடுப்பு போன்றபொருள்களைத் தரும். ஆண்கள் மட்டுமேஆடும் ஆட்டமாகஒயிலாட்டம் இருப்பதால்கம்பீரமும் எடுப்பும்மிக்க அழகுள்ளஆட்டம் என்பதாகும். இக்கலை கோயில்திருவிழாவின் போதும்பொது நிகழ்ச்சிகளிலும்நிகழ்த்தப்படுகிறது. முன்னோர்களையும்ஊர்த் தெய்வங்களையும்வழிபடும் போதும்அம்மன் கோயில்விழாக்களிலும் விநாயகர்கோயில், கத்தோகிக்கக்கிறித்தவக் கோயில்களிலும்இக்கலை நிகழ்த்தப்படுகிறது. கோயில் கும்பாபிசேகநிகழ்ச்சிகளிலும் இக்கலைநிகழ்த்தப்படுகிறது.

ஒயிலாட்டம் ஆடுபவர்கள்வேட்டியைக் கீழ்ப்பாய்ச்சிக்கட்டிக் கொண்டுமேலே வெள்ளைச்சட்டை அணிந்துஇரண்டு அல்லதுமூன்று வண்ணங்களாலமைந்ததுணியால் தலைப்பாகைக் கட்டிவலக்கையில் வண்ணக்கைக் குட்டையைப்பிடித்திருப்பார்கள். கோயில்சடங்குகளில் ஆடும்ஆட்டக்காரர்கள் சட்டைஅணியாமல் விபூதி, சந்தனம் பூசிமாலை அணிந்திருப்பார்கள். இராமாயணம் போன்றகுறிப்பிட்ட கதைப்பாடல்களைப் பாடிஆடுகின்றவர்கள். அக்கதையின்முக்கிய பாத்திரங்களாகஆட்டக்காரர்களுள் சிலர்வேடம் புனைந்துகொள்வர். பெண்வேடம் போடுபவர்புடவை கட்டியிருப்பார்.


கழியல்ஆட்டம்

கம்பு (கழி) என்றபொருளைத் தருவதால்இது கழியல்ஆட்டம் எனப்பெயர் பெற்றது. இந்தக் கழியல்ஆட்டம் களியல், கழலடி, களல், கழியல் என்றுபல்வேறு பெயர்களிலும்வழங்கப்படுகிறது. இவைமட்டுமின்றி இக்கலையைக்கோல்களி, கோலடிக்களி, கோலடி, கம்புகளி, கம்படவுகளிஎன்னும் பலபெயர்களில் மலையாளத்தில்வழங்குகின்றனர். கழியலாட்டம்நடத்தப்படும் இடத்தை ‘களரி’ அல்லது ‘இலங்கம்’ என்றுகூறுவார்கள். இவ்வாட்டம்வட்டமாக ஆடப்படுகின்றது. முந்தைய காலங்களில்இரவில் இவ்வாட்டம்நடத்தப்பட்டது. நடுவில்விளக்கை ஏற்றிவைத்து ஆடுவார்கள். உரலைக் கவிழ்த்துப்போட்டு, குத்துவிளக்கை வைத்தும்ஆடுவர். கழியல்ஆட்டத்தில் கழியல்ஆட்டக் கோல்கள்எழுப்பும் ஓசையேமுதல் இசையாகஅமைகிறது. கழியல்ஆட்டக் கோல்களில்சலங்கை மணியினைக்கோத்தும், கால்களில்சலங்கை கட்டியும்ஆடுகின்றனர். இக்கலையில்எட்டுப் பேர்பங்கு கொள்கின்றனர். ‘கும்மி களியல்’ என்ற ஆட்டத்தில்பலர் கலந்துகொள்கின்றனர்.


மயிலாட்டம்

மயில் உருவத்தைக் கொண்டு செய்யப்பட்ட பொம்மையில் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்தின் இசைக்கேற்ப கலைஞர்களால் ஆடப்படும் ஆட்டம் மயிலாட்டம். இது மயில் நடனம் எனவும் அழைக்கப்படும். மயிலாட்டம் என்பது ஒரு நாட்டுப்புற நடனம். இது மயிலின் தோகையை ஒத்த உடையை அணிந்து, மயிலின் அசைவுகளைப் போலவே கலைஞர்கள் ஆடும் ஒரு நடனமாகும். இந்த நடனம் பெரும்பாலும் தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில், குறிப்பாக முருகன் கோயில்களில் நிகழ்த்தப்படுகிறது. இது ஒரு மத மற்றும் கலாச்சார நடனமாகக் கருதப்படுகிறது.மயிலாட்டம் ஆடுபவர்கள், மயிலின் தோகையைப் போன்ற உடையை அணிந்து, மயிலின் அசைவுகளைப் போலவே ஆடுவார்கள். மயிலாட்டத்தில், கலைஞர்கள் மயிலின் ஓடுதல், தலையை அசைத்தல், தோகையை விரித்தல் போன்ற செயல்களை நடன அசைவுகளாக செய்வார்கள். பண்டிகைகளின் போது, இந்த நடனம் அனைத்து முருகன் (சுப்பிரமணியர்) கோயில்களிலும் ஒரு வழக்கமாக நிகழ்த்தப்படுகிறது.


முடிவுரை

நாட்டுப்புறக்கலைகள் தமிழர் பண்பாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும். பண்பாட்டின் பாலமாகத்திகழ்வது நாட்டுப்புறக்கலைகளே ஆகும். நாட்டுப்புற கலைகளை பாதுகாப்பதும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதும் தலையாய கடமையாகும். ஏனெனில் நாட்டுப்புறகலைகளே தமிழர்களின் அடையாளமாகும்.


துணைநூற்ப்பட்டியல்

1. தொல்காப்பியம்

இளம்பூரணர் உரை

தமிழ்ப்பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் - 613 010


2. நாட்டுப்புறஇயல் ஆய்வு

டாக்டர்.சு.சக்திவேல்

மணிவாசகர் பதிப்பகம்

சென்னை - 600 108


3. நாட்டுப்புறவியல்

பேரா.சு.சண்முகசுந்தரம்

மணிவாசகர் பதிப்பகம்

சென்னை - 600 108

4. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

டாக்டர்.கே.கே.பிள்ளை

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்

சென்னை - 600 113

5. காலந்தோறும் தமிழர் கலைகள்

முனைவர்.பாக்யமேரி

அறிவுபதிப்பகம்

சென்னை - 600 014


Share: