சிலப்பதிகாரத்தில் வாணிகம்


த.பிரகாஷ்
ஆய்வியல் நிறைஞர்
பூ.சா.கோ.கலைஅறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்.


முன்னுரை:-
சிலப்பதிகாரம் என்னும் சிறப்பதிகாரத்தில் பல்வேறானசிறப்பம்சங்கள் தமிழனை இன்றளவும்உலகளவில் நெஞ்சம் நிமிர்ந்துநடக்கச்சொல்லும். அந்தவகையில்மூன்றுநாடுஇமூன்றுஅறங்கள்இமற்றும் முத்தமிழ் உள்ளிட்டவற்றைஒருசேரசங்கமிக்கச் செய்தபெருமை இளங்கோவடிகளையேச் சாரும்.சிலப்பதிகாரகாலத்தில் மன்னர்க்குஅடுத்தநிலையில் வாணிகர்களே இருந்துள்ளனா.; அரசர் பின்னோர்க்குஅருமறைமருங்கின் (16:44)இன்றளவிலும் கூட அனைத்துநாடுகளிலும்வாணிகமேசெல்வாக்குபெற்றுள்ளது.மேலும் ஒருநாட்டின் உள்நாட்டுவாணிகம்இவெளிநாட்டுவாணிகம்இ பொருளாதார மேம்பாடுபோன்றவற்றின் வளர்ச்சிக்கு வாணிகமே மூலாதாரமாகத் திகழ்கிறது.
வாணிகம் விளக்கம்:-
உற்பத்திதேவைக்குமிஞ்சும் போதுபண்டத்தைமாற்றும் நிலைஉருவாகின்றது. பண்டமாற்றுவாணிபம் அவ்வாறுதுவங்கியது. பின்னர் வசதிக்காகநாணயத்தைப் பயன்படுத்திப் பண்டங்களைவாங்கவும்இவிற்கவும் செய்தனர்.
மக்கள் தங்கள் நாட்டில் கிடைத்தப் பொருட்களைஉள்நாட்டில் விற்பதற்காகதலையில் சுமந்துகொண்டும் வண்டிகள் கட்டிக்கொண்டும்; வந்தனர். பின்னர்உள்ளுர் வாணிபம் நீங்கலாகதமிழகத்தில் பலகிராமங்களில் உள்ளபொருட்கள் நகரங்களில் உள்ளபெரியஅங்காடிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. மேலும் அக்காலத்தில் புகார்இமதுரைபோன்ற இடங்களில் பெரியபெரியசந்தைகள் இருந்துள்ளதுஎன்றுதி.செல்லம் அவர்கள் தமிழகவரலாறும் பண்பாடும் என்ற நூலின் வழியாக இயம்புகிறார்.

சிலம்பில் வாணிகம் :-
கற்பிற்கு இலக்கணம் பகர்ந்தசெந்தமிழின் மூத்த இலக்கண நூல் தொல்காப்பியமாக இருக்கலாம் ஆனால்இஅதனைநாடகவடிவில் சமைத்துவடித்துஉலகறியவிருந்தளித்தபெரும்பேறுகோமகனார் இளங்கோவனையேச் சாரும்.
‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்இ ‘முத்தமிழ்க்காப்பியம்’தமிழனின் பெருமையைஉயர்த்திக் காட்டியஉன்னதப் பெருங்காப்பியம்’எனப் பலசெம்மாந்தசிறப்புகளைத் தன்னகத்தேகொண்டுள்ளதுசிலம்பு.
இச்சிலம்பில் வாணிகம் மிகச்சிறப்பாகநடந்தேறியுள்ளது. அதற்கானசான்றுகளைப் பின்வருமாறுகாணலாம்.
பண்டையக்காலத்தில் பண்டமாற்று மூலமாகவாணிகம் நடைபெற்றது. உப்பிற்காகநெல்லைஈடாகமாற்றிக்கொண்டனர். மேலும் போரின் வெற்றிக்குப் பின்னர் வீரர்கள் கைப்பற்றிவந்தஆநிரைகளைகள் விற்பவர்க்கும் ஆநிரைக் கவரஉதவியோர்க்கும் நிமித்தம் கூறியவருக்கும் ஈடாகஅளித்தனர் எனவேட்டுவவரியில் கூறப்பட்டுள்ளது. (12:பா13)
மேலும்இவாணிகம் பகல்இ இரவுஎன இருவேளைகளிலும் நடைபெற்றது. பகலில் நடைபெறும் வாணிகம் நாளங்காடிஎனவும் இரவில் நடைபெறும் வாணிகம் அல்லங்காடிஎனவும் அழைக்கப்பட்டது.
“நடுக்கின்றிநிலைஇயநாளங்காடியில்”(5;:63) என்றவரியின் வழியாகவும்இ
“அரைசுவிழைதிருவின் அங்காடிவீதியும்”என்றவரியின் வழியாகவும்இ
“சிங்காவண்புகழ்ச் சிங்கபுரத்தினோர்
அங்காடிப் பட்டருங் கலன் பகரும்”; என்றவரியின் மூலமாகவும் அறியமுடிகின்றது.
மேலும் எந்தக் கடையில் என்னென்னபொருட்கள் விற்கப்படும் என்பதைக் கொடிகள் பதாகை மூலம் வெளிப்படுத்தினர். (6:131-133)
இருநாட்டுஅரசர்கள் போரிடும் போர்க்கள் ஓசைபோலவாங்குவோர்இவிற்போர் ஓசையெங்கும் ஒலித்தது. (5:62-63)
“இலங்குகொடிஎடுக்கும் நலங்கிளர் வீதி” (14:204)
என்றவரியின் வாயிலாகவும்
“கூல மறுகில் கொடிஎடுத்துநுவலும்” (6.32) என்றவரிகளின் வாயிலாகவும் அறியமுடிகின்றது.
ஓரிடத்தில் உற்பத்திசெய்தபொருளைமக்கள் அதிகமாகக் கூடும் ஓரிடத்தில் கடைவீதிகளில் வைத்துவிற்றனர். பொருட்களைபிற இடங்களுக்குஎடுத்துச் சென்றுதெருத் தெருவாகவிற்றுள்ளனர். மருவூர்ப்பாக்கத்தில் சாந்து. சுண்ணம். பூஇபண்ணியம்இபிட்டுஇ அப்பம்இஉப்புமீன்இ ஊன்இ கள் போன்றவைவிற்கப்பட்டன. அங்குவணிகர்கள் ஏற்றியவிளக்குவெளிச்சத்தில் மணலில் விழுந்தவெண் கடுகுகள் கூடத் தெரியுமாம். இதன் மூலம் இரவுநேரத்தில் விளக்கேற்றிவாணிகம் செய்துள்ளனர் என்பதைஅறியலாம். மேலும் இரவில் வாணிகம் நடைபெற்றதால்இவை அல்லங்காடிகள் எனஅழைக்கப்பட்டது.(6.134-145)
மேலும்இபுகாரின் கடற்கரையில் மலைபடுபொருட்களும்இகடல்படுபொருட்களும் எங்கும் நிரம்பியும் விலையுயர்ந்தபட்டுத்துணிகள் சந்தனம் அகில் மாசற்றமுத்துமற்றும்பிறநவமணிகள் பொன் ஆகியன இவ்வளவுஉள்ளதெனஅளந்தறியாவண்ணம் கிடக்கின்றன.மேலும் பற்பலபண்டங்களும் நெல் வரகுதினைமுதலியஎண்வகைக் கூலங்கள்;தனித்தனியேகுவிக்கப்பட்டுவிற்கும் அங்காடிவீதிகள் இருந்தன.மேலும்இபூமலிகானம் (5:197) என்றபாடல் வரியின் மூலமாகபுகாரில் பூ வாணிகம் மிகுதியாகநடைபெற்றதைஉணரலாம். எனவேஅனைத்துப் பொருட்களும் விற்கும் வாணிக இருப்பிடமாகப்; புகார் திகழ்ந்தது.
மதுரைவழியாகக் கோவலன் கண்டவைகள்;:-
மூடுவண்டிஇ இருஉருளைவண்டிஇதேர்மொட்டுஇஉடம்பிற்கானகவசம்இஅங்குசம் தோலாலானகைத்தளம்;;இவளைதடிஇவெண்சாமரைஇபன்றிமுகப்படம்இகிடுகின்படம்இகாடெழுதினப்படம்இகுத்துக்கோல்கள்இசெம்புஇவெண்கலம்மற்றும்கயிறுபோன்றவற்றால் செய்தபொருட்கள் வாசனைமற்றும் புகைப் பொருட்கள் மயிர்ச்சாந்துப்பொருட்கள் பூமாலைபோன்றபொருட்கள் விற்கும் அங்காடிகளைக் கண்டுசென்றான்.(14:168-179)
மேலும்இசாதரூபம் ஆடகம் சாம்பூநதம் என்றநான்குவகைகளில் பொன் விற்கும் காசுக்கடைவீதியைக் கோவலன் கண்டான்.(14:201-204)
மேலும்இபருத்திஎலிமயிர் பட்டால் நுணுக்கமாகநெய்தபலநூறு அடுக்குகளாகஅடுக்கிவைக்கப்பட்டஅறுவைவீதியானதுணிக்கடைவீதிகள் எனப் பலவற்றைக் கண்டான்
பணப்பயிரும் என்றும் கிடைக்கின்றதுமானமிளகுமற்றும் உணவுத்தவசங்கள் போர்க்கருவிகள் வாசனைப்பொருட்கள் நவரத்தினபொன்னணிகள் ஆடைகள் ஆகியபொருட்கள் மதுரையில் விற்கப்பட்டன. இவற்றிற்கெனதனித்தனிதெருக்களும் வணிகர்களும் இருந்தனர்.
சாலைகளும் பெருவழிச்சாலைகளும்:-
உள்நாட்டுவாணிகம் சிறப்புடன் நடைபெறவும் மக்களின் பயணத்திற்காகவும் நாடுகளுக்கும் நகரங்களுக்குமிடையேபெருவழிச்சாலைகளும் சாதாரணச் சாலைகளும் அமைந்திருந்தன.
“குடதிசைக் கொண்டுகொழும்புனற் காவிரி
வடபெருங் கோட்டுமலர்ப் பொழில் நுழைந்து”
காவிரியின் தென்கரையின் சோலைகள் நிறைந்தசாலைவழியேகோவலன் கண்ணகிகவுந்தியடிகள் ஆகிய மூவரும் திருவரங்கம் அடைந்தனர்.(10:34-35) உறையூரைஅடுத்துள்ளகொடும்பையிலிருந்துமதுரைக்குச் சிவனின் சூலம் போல மூன்றுவழிகள் உண்டு.(11:72-73)மதுரைக்குச் செல்லமாங்காட்டுமறையோன் கூறும்; தனிப்பெரும் வழி (11:147) இவ்வாறாகமக்களின் பயன்பாட்டிற்காகவும் வணிகர்களின் பயன்பாட்டிற்காகவும் சாலைகள் அமைக்கப்பட்டுஉள்நாட்டுவாணிபத்தில் சிறப்பாகசெயல்பட்டனர் என்பதைஅறியமுடிகின்றது.
வெளிநாட்டுவாணிகம்:-
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுஎன்பதற்கிணங்க மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன்னரேதமிழர் கடல் கடந்துபிறநாடுகளுக்குச் சென்றுவாணிகம் செய்துள்ளனர். கோவலன் கடல் வாணிகம் செய்தசெய்திஅறியமுடிகின்றது. மேலும்இசாதுவன் கடல் வாணிகம் செய்ததும் கற்பரசியர் சிலர் கடலில் சென்றதம் கணவன் வரும் வரைகாத்திருந்தசெய்திஅறியமுடிகின்றது.
மேலும்இகண்ணகியின் தந்தைமாநாய்கன் கடல் வாணிகம் செய்பவராவார். கலம் வங்கம் அம்பிபடகுமரத் தோணி மூலம் கடல் கடந்துசென்றுவந்துள்ளனர். இலங்கைகிழக்குநாடுகள் எகிப்துகிரேக்கம் போன்றநாடுகளுடன் கடல் வாணிகம் செய்துள்ளனர்.
“கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டத்” (2:7)
“கலம்தருதிருவின் புலம்பெயர் மாக்கள்” (6:130)
“உடைக்கலப்பட்டஎங்கோன் முன்னோன்”(15:29)
“மணல்வலிபூங்கானல் வருகலன்கள் நோக்கி”; (21:16)
என்றவரிகள் கடல் வாணிகத்தைத் தெளிவுபடுத்துகின்றன.
மேலும்இபூம்புகார் துறைமுகத்தின் சிறப்புகளைபின்வரும் பாடல் வரிகள் மூலம் விளங்கலாம். (6:152-154) (2:5-7) (5:11) (6:130) (6:141) (29:32) (118-125)மேலும் வெளிநாட்டிலிருந்துதொண்டியில் இறக்குமதியானஅகில் ஆரம் வாசம் கற்பூரம் போன்றவை மதுரைக்குக் கொண்டுவரப்பட்டன. மேலும்இதொண்டிமற்றும் கொற்கைதுறைமுகபட்டினங்களாகும்.
“கொற்கையம் பெருந்துறை” (14:80)
மேலும்இ அங்கு முத்துக்குளித்தலும் முத்துஏற்றுமதியும் சிறப்பாக நடைபெற்றது. சேரநாட்டின் துறைமுகப் பட்டினம் வஞ்சியாகும்.
இதனைத் தொடர்ந்து மிகமுக்கிய அம்சமாக கப்பல்களுக்கு வழிகாட்ட கலங்கரை விளக்குகள் இருந்துள்ளன.
“இலங்குநீர் வரைப்பில் கலங்கரைவிளக்கமும்” (6:141)
என்;ற வரியின் மூலமாகவிளங்கமுடிகிறது.

முடிவுரை:-
 சங்ககால மக்களின் பொருளாதார நிலைப்பாடுகளோடு கூடிய வாழ்வியல் கூறுகளை அறியமுடிகிறது.
 வாணிகத்தின் தோற்றம் மற்றும் உச்சத்தைதச் சான்றுகளோடுஉணரமுடிகிறது.
 சங்ககால மக்களின் வணிகரீதியான இன்னல்களையும் பின்னல்களையும் மற்றும் அதனைச் சார்ந்த பின் புலன்களையும் அறியவும் புரியவும் இயலுகின்றது.
 சங்ககால வணிக ஊர்திகளின் பயன்பாடானது இன்றையக் கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்துள்ளதை விளங்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *