பண்டைத் தமிழரின் வாணிகம்

வாணிகம்

முனைவர் மு. அவையாம்பாhள்
உதவிப் பேரசிரியர் தமிழ்த்துறை
எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி
திருப்பூர்

முன்னுரை :
பண்டைத் தமிழரின் வாழ்வியலை எடுத்துரைக்கும் இலக்கிய கருவூலம் சங்க இலக்கியங்களாகும். இயற்கையோடு இணைந்த வாழ்வினைக் கொண்ட பண்டையத் தமிழர்களின் வாழும் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் வாழ்வாதாரமாகிய தொழில்களும் அமைந்திருந்தன. அவ்வாறு அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை;க கொடுத்துத் தேவையான பொருட்களைப் பெறுகின்ற பொழுது வாணிபம் மிகவும் இன்றியமையாதது. நாகரீகச் சிறப்பு மிகுந்த தமிழர்கள் வாணிகத்தில் சிறப்புற்று விளங்கிய தன்மையை பருந்ல் பார்வையாக சங்க இலக்கியங்கள் வழிநின்று எடுத்துரைப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
பண்ட மாற்று வாணிபம் :
பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக் கொள்வது சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்து கொண்டார்கள். ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள். தயிரையும், மோரையும் மாற்றித் தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டனர். பெரும்பாண 155-163 கடற்கரையைச் சார்ந்த உப்பளங்களில் நெய்தல் நில மக்கள் உப்பு விளைவித்தனர். உப்பளத்தில் விளைந்த உப்பை நெல்லுக்கு மாற்றியதை
“கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலை மாறு கூறலின்”
என்று அம்மூவனார் கூறுகிறார்
உப்பை நெல்லுக்கு மாற்றிய உப்புவணிகர் தமக்குக் கிடைத்த நெல்லைச் சிறுபடகுகளில் ஏற்றிக் கொண்டு கழிகளில் ஓட்டிச் சென்றதை
“குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றிட
நெல்லோடு வந்த வல்வாய்ப் பஃறி”
என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்.
இவ்வாறு பண்டமாற்று வாணிகம் சிறப்புற்று இருந்ததை அறிய முடிகிறது.

உள்நாட்டு வாணிபம்; :
பண்டமாற்று முறையில் வாணிபம் நடைபெற்றது. போல காசு கொடுத்தும் பொருளை வாங்கும் பழக்கம் அக்காலத்தில் காணப்பட்டன. ஒரு நாட்டின் விளைபொருட்கள் அந்தந்த நிலப்பகுதிக்குள்ளும் அந்நாட்டிற்குள்ளும் விற்பனை செய்யப்படுவதை உள்நாட்டு வாணிபம் எனலாம்.
உள்நாட்டு வாணிகத்தில் முக்கிய இடம் வகிப்பவை அங்காடிகள் ஆகும். பகலி;;ல் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் நாளங்காடி எனவும் இரவு நேரத்தில் விற்பனை நடைபெறும் கடைகளை அல்லங்காடி என்றும் குறிப்பிடுகின்றன. இத்தரு அங்காடிகளில் விற்க்கப்படும் பொருட்களை அடையாளப்படுத்து;ம் வகையில் வெவ்வேறு வண்ணக் கொடிகள் நடப்பட்டிருந்தன. இவ்வகைக் கொடிகள் பற்றிய செய்திகள் பதி;ற்றுப்பத்து அகநானூறு பட்டினப்பாலை மதுரைக் காஞ்சி போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

மருதநிலத்தில் உள்ள கழனியிலும் மடுக்களிலும் பொய்கைகளிலும் மீனைப்பிடித்து விலைகூறி வி;ற்றதை.
“வண்டு இறை கொண்ட கமழ்பூம் பொய்கை
வள்ளை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூலிலாட்டு (மதுரை. 253.258) என்னும் அடிகளால் அறியலாம்.

முதுபெண்டிர் நுகர்பொருட்களை ஏந்தியவர்களாய் இல்லங்கள் தோறும் உலவி விற்றதையும் அப்பண்டங்களின் சுவையும் மணமும் மாறாமலிருக்க வனப்புடைய செப்புகளில் மூடி விற்றனர். என்பதை அறியமுடிகிறது. (மதுரை 421.423) மதுரை மாநகர நாளங்காடித் தெருவில் பூக்களையும், மாலைகளையும் விற்றனர். (மதுரை 397.398) மேலும் அதே நாளிங்காடியில் மணப்பொடிகளை விற்போர், வெற்றிலை பாக்கு விற்போர், சுண்ணாம்பு விற்போர் குறித்த செய்திகளும் காணப்படுகின்றன. தூங்காநாகரமான மதுரையில் அல்லங்காடியும் சிறப்பாகச் செயல்;பட்டது. இவ் அங்காடியில் பண்ணியம் விற்று முத்தும் மணியும் விலையாகப் பெற்றனர். அடை, விசயம் மோதிகம் பற்றிய பொருட்களை விற்ற செய்திகளையும் காணமுடிகிறது. (மதுரை 621.626.)

காவிரிப்பூபட்டினத்திலுள்ள மக்கள் கள் விற்கும் தொழிலைச் செய்திருக்கின்றனர். கள் மட்டுமின்றி கள்ளை அருந்தும்போது உண்ணப்படுகின்ற உணவுப் பொருட்களான பொறித்;த மீன் மாமிசம் ஆகியவற்றையும் விற்றுள்ளனர். கள் விற்கும் இடத்தில் கொடியை நட்டு வைத்து அடையாளப்படுத்தியுள்ளனர். (பட். 176.180)
உள்நாட்டு வாணிபத்தில் சிறப்பிடம் பெற்றுள்ள அங்காடிகளில் பல்வகைப் பொருட்களும் விலை கூறி விற்கப்பட்டதை அறியமுடிகிறது.

வெளிநாட்டு வாணிகம் :
பண்டைத் தமிழகத்தில் உள்நாட்டு வாணிகம் சிறப்புற்று இருந்தது போலவே வெளிநாட்டு வாணிகமும சிறப்பாக நடைபெற்றது. (அக்காலத்தில் மக்கள் கடல் வழியாகப் பொருட்களை விற்றும். பெற்றும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வணிகத்தில் நாவாய்கள் பயன்பட்டதை) “பொன் மலிந்த விழுப்பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயற்பெரு நாவாய்” (மதுரை 81.83) என்ற அடிகள் உணர்த்துகின்றன.
சோழ நாட்டிற்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் உள்ள நாடுகளிலும் வணிகம் நடைபெற்றதால் துறைமுகத்தில் அரியவும். பெரியவுமான பொருள்கள் நிறைந்து காணப்பட்டன. அரேபியாவிலிருந்து கப்பலி;ல் குதிரைகள் வந்தன. ஏற்றுமதி செய்வதற்காக கரிய மிளகுப் பொதிகள் நாட்டின் பிறபகுதிகளிலிருந்து வந்தன. மேரு மலையிலிருந்து மாணிக்கக் கற்களும், சாம்பூந்தம் என்னும் பொன்னும் குடகுமலையில் தோன்றிய சந்தனமும் அகிலும் தென்திசைக் கடலில் பிறந்த முத்தும் கீழ்திசைக் கடலில் பிறந்த பவளமும் கங்கையாற்றில் பிறந்த பொருள்களும் காவிரியாற்றில் பிறந்த பொருள்களும் காழகம் என்னும் கடாரநாட்டில் உண்டான பொருள்களும் குவிந்து கிடந்தன. பட் 185.193
பிறநாட்டு வணிகர்கள் மதுரையில் செய்யப்பட்ட அணிகலன்களைக் கொண்டு செல்வதற்குகாக நன்றாகப் பாய் விரித்த மரங்கலங்களில் வருவர். பிற நாட்டு மரக்கலங்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை இறக்குதலும். இந் நாட்டுப் பொருட்களை பிறநாட்டு மரக்கலங்களில் ஏற்றுதலும் தொடர்ந்து நிகழ்நது கொண்டே இருப்பதால் மதுரையில் அல் அங்காடிகளில் ஓசை ஒலித்துக் கொண்டே இருக்கின்றது (மதுரை 536.544)
இ;வவாறு பன்னாட்டு வாhணிகம் சிறப்புற்று இருந்தமையை உணரமுடிகிறது.
பண்டகச்சாலை :-
தமிழகத்தில் உற்பத்தி செய்த பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யவும் வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யவும் பயன்படும் வகையில் பண்டகச்சாலை இருந்துள்ளது. அப்பண்டகசாலை அளவில்லாத பொருள்களை உடையதாக இருந்தால் அது கடிய காவலை உடையதாக இருந்துள்ளது. இதனை
“நீரினி;னறும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினி;ன்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாய் பலபண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங் கடிப் பெருங்காப்பின்” (பட் 128.133)
என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றது.
சுங்கம் :-
பண்டைக்காலத்தில் இறக்குமதி;ப் பொருள்களுக்கும், ஏற்றுமதிப் பொருட்களுக்கும் அரசு வரி விதித்தது. இவ் வரிகளுக்கு உல்கு, சுங்கம் என்ற பெயர்கள் வழங்கப்பட்டன. இ;த்தகைய வரியே அரசின் முக்கிய வருமானமாகும். காவிரி;பபூம்பட்டினத்துக் கடல் துறைமுகத்தில் இறக்குமதி பண்டங்களுக்கு ஏற்றுமதி பண்டங்களுக்கும் நிலத்திலிருந்து வந்த பண்டங்களும் சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளன. நீர் வழியாக வந்த பண்டங்களுக்கு சுங்கச் சாவடிக்குள் அனுப்பப்படுகின்றன. அவைகள் சுங்க அதிகாரிகளால் பரிசோதி;க்கப்பட்டு பரிசோதி;க்கப்பட்டதற்கு அடையாளமாக சோழனுடைய புலிச்சின்ன முத்திரையிடப்படுகிறது. பண்டத்தின் நிறைக்கும், அளவிற்கும் ஏற்ப வரிவாங்கப்பட்டு;ளளது. பட் 129.137)
இதனால் பொருட்கட்டு வரி விதிக்கப்பட்டதைகளையும் பண்டங்கள் பாழடையாமலும் திருட்டுப் போகமலும் சுங்கச்சாவடியை பாதுகாக்கப்பட்டதை அறியமுடிகிறது.
வணிகர்களின் நல்லியல்புகள் :-
பொருள்களை வாங்குதல் விற்றல் என்னும் நிலையில் தொழில் செய்யும் வணிகர்கள் மிகச் சிறந்த பண்பாடு உடையவர்களாகவும், அறச் செயல்களில் ஈடுபாடு உடையவர்களாகவும் விளங்குகின்றனர். நீன்ட நுகத்தடியிலே தைத்திருக்கும் நடுஅணிபோல் நடுநிலையிலே நின்று பழிக்கு அஞ்சி உண்மையே பேசுவர். தம் பொருள்களைப் போலவே பிறருடைய பொருள்களையும் மதிக்கத்தக்கவர்கள். பொருள்கள் வாங்குவோரிடம் அளவுக்கு மேல் அதிகமாக வாங்க மாட்டாகள் தாங்கள் கொடுக்கும் பொருள்களையும் குறைத்துக் கொடுக்க மாட்;டார்கள். பல பொருட்களை நியாயமான விலையைக்கூறி விற்பனை செய்வார்கள். (பட் 206.211) மேலும் புகார் நகர வணிகர்கள் தங்களுக்கு வரக்கூடிய இலாபத்தை மறைக்காமல் வெளிப்படையாகக் கூறியே வாணிகம் செய்துள்ளனர்.
புகார் நகரத்தில் சிறந்து விளங்கிய வணிகர்கள் பல்வேறு அற்ச்செயல்களைச் செய்துள்ளனர். அவர்கள் கொலைத் தொழிலைத் தாம் செய்யாததோடு பிறரும் செய்யாமல் தடுத்தனர். களவுத் தொhழலை நீக்கி தேவர்களுக்குப் பலிதந்து வழிபட்டனர். வேள்விகளை இயற்றி அவற்றின் அவதிப் பொருட்களை அவற்றிற்குரிய தெய்வங்களுக்குக் கொடுத்துள்ளனர்.
“கொலை கடிந்தும் களவு நீக்கியும்
அமரர்ப் பேணியும், ஆவுதி அருந்தியும் (பட் 198.199) என்பதன் முலம் அறியலாம்.
இத்தகைய நல்லியல்புகளைக் கொண்டவர்களாக வணிகர்கள் திகழ்ந்துள்ளனர். என்பதனை அறியமுடிகிறது.
முடிவுரை :-
சங்ககாலத்தில் வாணபம் பண்டமாற்று முறையிலும், காசு கொடுத்து பொருளைப் பெறுதில் என்னும் நிலையிலும் அமைந்திருந்ததை இலக்கியங்கள் வாயிலாக உணரமுடிகிறது. உள்நாட்டு வாணிகமும், பன்னாட்டு வாணிகமும் நடைபெற்றன உள்நாட்டு வாணிகத்தில் அங்காடிகளின் சிறப்பும், கடல்வழி வாணிகத்தில் குதிரை சிறப்பிடம் பெற்றதையும் அறியமுடிகிறது. இறக்குமதி, ஏற்றுமதி;ப பொருட்களுக்கு உல்குவரி வலிக்கப்பட்டது. வணிகர்கள் நடுநிலைமையும், உண்மையும் அறநெறியும் புலப்பபடுத்த்பப்டடுள்ளன. தழரின் வாணிகம் சிறந்த முறையில் எக்காலமும் எந்நாட்டவரும் போற்றும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *