செ.வில்லியம் சுரேஸ் குமார்
உதவிப்பேராசிரியர்
ஆனந்தா கல்லூரி
அறிமுகம்:
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனித சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது தகவல் தொழில் நுட்பம். இப்புரட்சி கணினியை மையமாகக் கொண்டு அமைகின்றது. கணினியினை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு தகவல்களை (Data) எவ்வாறு பரிமாறிக் கொள்ளலாம் எனும் மனிதச் சிந்தனையின் விளைவாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள கணினிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதனை கணினி கட்டமைப்பு (Computer Network) என்பர். இவ்வாறு இணைக்கப்பட்ட கட்டமைப்புக்களின் பிணைப்பே இணைய சமுதாயம் (Internet Society) எனப்படும்.
இணையம் தொடக்க கால கட்டங்களில் இராணுவ நிர்வாகம் மற்றும் அறிவியல் ஆய்வாளர்களின் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. புரந்து விரிந்த இவ்வுலகினை நொடிப்பொழுதில் இணைக்கும் இணைப்புப்பாலமாக இன்று இணையம் வளர்ச்சி பெற்றுள்ளது. இணையத்தின் வாயிலாகப் பொழுதுபோக்கு நிகழ்வுகள் முதல் அறிவு சார்ந்த நிகழ்வுகள் வரை இன்று பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
இணையத்தின் தொடக்ககாலம் அறிவு சார்ந்த தரவுகளைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகமாக அமைந்தது. எனவே தனது ஆணிவேரை நிர்வாகம் மற்றும் ஆய்வும் களங்களில் செலுத்திஇ பின்னர் கல்வியியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இன்று தனது பக்க வேர்களை நகரங்களுக்குள் ஊடுருவச்செய்துள்ளது. எனவே நகர மக்களின் வாழ்க்கையில் இன்று இணையம் எவ்வகையில் தனது பங்களிப்பை வழங்குகின்றது என்பது குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது.
நகர மக்களின் வாழ்க்கைப் பயணம்:-
இன்றைய சூழலில் பெருநகர வாழ்க்கை என்பது இயந்திரமயமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு ஒவ்வொரு மணித்துளியிலும் விழிப்புடனும்இ துடிப்புடனும் செயல்பட வேண்டியுள்ளது. இவ்வகையில் நகரச் சூழலில் கட்டுண்டு போன மனிதனின் வாழ்க்கைச் சுமையை எளிமைப்படுத்தி அவனது தேவைகளை ஒரு சேர வழங்குகின்றது இணையம்.
தகவல் தொடர்பு ஊடகம்:
உறவுகள் வலுவிழந்து தனிமனிதனாகவும்இ தனிக்குடும்பங்களாகவும் இன்றைய நகர வாழ்க்கை இயங்குகின்றது. இச்சூழலில் இவர்களை மனித சமுதாயமாக இணைக்கும் இணைப்புப் பாலமாக அமைவது தகவல் தொடர் சாதனங்கள்.
நகர வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத தகவல் தொடர்புச் சாதனங்கள்இ செய்தித்தாள்இ தொலைபேசிஇ தொலைக்காட்சிஇ போன்றவை. இத்தகவல் தொடர்பு சாதனங்களின் பண்புகளை ஒரு சேரப்பெற்று பரந்துவிரிந்த இவ்வுலகினை நொடிப்பொழுதில் இணைக்கின்றது இணையம்.
நகரவாழ் மக்கள் இணையத்தை பிறருடன் தொடர்பு கொள்ளவும் ஆன்மீகம் முதல் சினிமா வரையிலான செய்திகளைக் கொண்டுவந்து சேர்க்கும் தகவல் தொடர்புப் பெட்டகமாகப் பயன்படுத்துகின்றனர்.
அன்றைய சூழலில் திருமணத்தின் போது திருமணத்தரவுகளைத் திரட்டி வைத்திருக்கும் இடைத்தரகர்களைப் போல இன்று இணையத்தினைப் பயன்படுத்துகின்றனர். இவ்வகையில் www.shaadi.com, www.tamilmatrimony.com, www.kalyanamalai.net
போன்ற இணையத்தளங்கள் திருமணம் தொடர்பான செய்திகளை நகரவாழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும் உளவியல் ஆலோசனைகளையும் பாலியல் ஆலோசனைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றி தகவல்களையும் அளிக்கின்றன. நகர மக்களுக்குத் தேவையானத் தகவல்கள் அனைத்கையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் தகவல் தொடர்பு பெட்டகமாக இணையம் விளங்குகின்றது.
வாணிபக் களமாக:
நெருக்கடியான நகரங்களில் கடைகளுக்குச் சென்று நெருக்கடியில் சிக்கித் தவித்து நேரத்தை செலவு செய்து தேவவையானப் பொருட்களை வாங்குவது மேல் தட்டு மக்களிடையே குறைந்து வருகின்றது. இதற்கு காரணம் மீ-வணிகம் (நு.ஊழஅ). தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய விரும்புபவர்கள் அப்பொருள்கள் குறித்த விபரங்களை இணையத்தளங்களில் வெளியிடுகின்றனர். இவ்வகையில் இ-பே(ந-டியல) போன்ற தளங்கள் அமைகின்றன. www.softpedia.com
எனும் தளம் புதிய மென்பொருட்களின் குறித்த செய்திகளை வெளியிடுகின்றது. இத்தளத்தின் வாயிலாக பயனபாட்டாளர் வாங்கும் மென்பொருளின் தரம்இ பயன்இ விலை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். இவ்வகைத்தளங்களின் வாயிலாக தேவையான பொருட்களை கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வகையில் இன்று நகர மக்களின் வாணிபக் களமாக இணையம் பயன்படுகின்றது.
பொழுதுபோக்கு மையம்:
அலுவலகச் சுமைகளும்இ நெருக்கடியும் நிறைந்த சூழலில் வாழும் நகர மக்கள் தங்களின் மன அழுத்தங்களைக் குறைக்க மனமகிழ்வைத் தரும் பொழுதுபோக்கு மையங்களை நாடிச்செல்கின்றனர். இவ்வாறு செல்லும் பொழுது பயண நெருக்கடியும்இ மனச்சோர்வும் மேலும் அதிகரிக்கின்றன. இவற்றைப் போக்கி நகர மக்களின் வாழ்க்கையை புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது இணையத்தளம். இணையத்தளங்களில் சினிமா முதல் விளையாட்டு வரைக் காணக்கிடைக்கின்றன. பொழுதுபோக்கிற்காக நகரவாழ் நடுத்தர வர்கத்தினர் உள்நாடுகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்குச் செல்வது உண்டு. எனினும் வெளிநாடுகளுக்கு செல்வது என்பது இயலாது.
இக்குறைபாட்டைக் களையும் விதமாக பல இணையத் தளங்கள் வெளிநாட்டுச் சுற்றுலாத் தளங்கள் குறித்த செய்திகளைப் படங்களுடன் வெளியிடுகின்றன. ஆப்பிரிக்க காட்டில் பல இடங்களில் புகைப்படக்கருவிகளைப் பொருத்தி விலங்குகளை நேரடிக் காட்சியா இணையத்தளத்தின் மூலம் வழங்குகின்றது றறற9.யேவழையெடபநழபசயிhiஉ.உழஅஃபெஅஃறனைஉயஅயகசiஉநஃறடைனஉயஅ.hவஅட எனும் தளம். இவை போன்ற தளங்களின் வாயிலாக நினைத்த நேரத்தில் நினைத்த பொழுதுபோக்கு தகவல்களைப் பெற இயலும். இதனால் இன்றைய நகர மக்களின் வாழ்க்கiயில் இணையதளங்கள் பொழுது போக்கு மையங்களாக இணைந்துள்ளன. இவ்வகையில் www.happypuppy.com, www.fileplanet.com
போன்ற தளங்கள் சிறுவர்களின் பொழுதுபோக்கு மையங்களாக அமைகின்றன.
நகர மாணவர்களின் நண்பன்:
ஆசிரியர்களின் கருத்துக்களையும் புத்தகங்களில் கிடைக்கும் தகவல்களையும் வைத்துக் கொண்டு கற்பது என்னும் நிலை இன்றைய நகர மாணவர்களிடம் குறைந்து விட்டது. ஏனெனில் உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மாணவர்களுடன் போட்டியிட வேண்டிய சூழுலில் இன்றைய மாணவ சமுதாயம் இயங்கி வருகின்றது. எனவே மாணவர்கள் தங்களின் பார்வையை விரிவாக்கிக்கொண்டு உலகளாவிய கருத்துக் கருவூலங்களைக் கண்டு படிக்க முற்படுகின்றனர். மேலும் மரபுவழிக் கற்பித்தலுக்கு மாற்றான கற்பித்தல் முறையையும் நகர்புற மாணவர்கள் விரும்புகின்றனர்.
இவ்வகையில் www.classbrain.com
என்ற இணையத்தளம் கல்வி தொடர்பான தகவல்களையும் கற்றுக் கொள்ளும் கருவிகளையும் வழங்குகின்றது. இத்தளத்தின் மூலம் 1ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் மேல் வகுப்பு மாணவர்கள் வரை பாடப்பயிற்சியினை மேற்கொள்ள இயலும். மேலும் குழந்தைகளுக்கு அனிமேசன் வாயிலாக எழுத்துக்களை எழுதும் முறை குறழத்து கற்பிப்பதால் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள இத்தளம் வாய்ப்பளிக்கின்றது.
உயர்கல்வி மாணவர்களுக்கு தகவல்களை வழங்கும் அறிவுக்கருவூலமாக பல இணையத்தளங்கள் விளங்குகின்றன. அவ்வகையில் www.education.denniskunkel.com
எனும் தளம் மைக்ரோஸ்கோப் உதவியுடன் எடுக்கப்பட்ட அறிவியல் புகைப்படங்களை வழங்குகின்றது. இவ்வகையில் இணையம் கல்விபுகட்டும் கருவியாகவும்இ உடனுழைக்கும் நண்பனாகவும் தன்னை மாணவர்களிடையே அறிமுகம் செய்து கொண்டுள்ளது.
முடிவுரை:
பணிச்சுமைகளுடனும்இ மனஅழுத்தங்களுடனும் தனது வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளும் நகர வாழ் மக்களுக்கும் தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் இடமாக இணையம் விளங்குகின்றது. மேலும் தங்களின் தேவைகளையும் பணிகளையும் விரைவாக செய்து முடிக்க இணையம் துணைபுரிகின்றது. இவ்வகையில் இணையமானது இன்றைய நகர வாழ்க்கையின் ஓர் அங்கம் எனலாம்.