முனைவர் கி. தினேஷ்குமார்
2/177, சன்னதி தெரு,
வடுவூர்-614 019.
மன்னார்குழ வட்டம்.
திருவாரூர் மாவட்டம்.
EMAIL: vaduvurdrdhinesh @gmail.com
பல ஆயிரம் வார்த்தைகள் கூறாத ஒரு விடயத்தை ஒரு ஒவியம் கூறும் என்பர். இவ்வாறாக ஒவியத்தின் சிறப்பை ஒரு வரிகளிகளில் கூறலாம். தமிழர்கள் ஆலயங்கள் வாயிலாக வளர்த்த நுண் கலைகளில் ஒவியக்கலையஜம் ஒரு சிறந்த நுண் கலையாகும். பல ஆலயங்களில் பஜராணம் மகான்களில் வரலாறு அக்கால நிகழ்வஜகள் என மூலிகை ஒவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இவ்வாறான ஒவியங்கள் ஆலய மண்டபங்களிலும், மேல் விதானங்களிலும். காணப்படுகின்றன. திருவாரூர் ஆலயத்தில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் காணப்படும் வரலாற்று சிறப்பஜ மிக்க ஒவியத் தொகுப்பில் முசுகுந்த பஜராணமும் 300 ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் ஆலயத்தில் நடைப்பெற்ற விழாக்களையஜம் ஒவியமாக வரைந்துள்ளனர். இவ்வோவிய தொகுப்பில் இசை மற்றும் நாட்டியம் தொடர்பான ஒவியங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இத்தகைய சிறப்பினை எடுத்தியம்புவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
தேவாசிரிய மண்டபம்
திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் கிழக்கு கோபுரம் வழியாக நுழைந்து சென்றால் மூன்றாம் பிரகாரத்தில் வடக்கு புறமாக கம்பீரமாக காட்சி அளிப்பது தேவாசிரிய மண்டபம் ஆகும். தேவாசிரியன் என்னும் இம்மண்டபம் சைவ சமய நிகழ்ச்சிகள் பலவற்றோடு நெருங்கிய தொடர்புடைய ஒன்றாகும். மேலும் இது தொன்மையானதும் கூட தேவாசிரியன் என்ற இச்சொல் தமிழ் இலக்கியங்களில் முதல் முதலாகச் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் தான் காணப்படுகிறது.
தேவாசிரிய மண்ட ஒவியத் தொகுப்பு
திருவாரூர் தேவாசிரிய மண்டப ஒவியத் தொகுப்புகள் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தஞ்சையை ஆண்ட மராத்ததியர் கால ஒவியங்கள் ஆகும். இந்த ஒவியங்களில் கீழே தமிழ் எழுத்துக்களால் அவ்வோவியங்கள் விளக்கப்பட்டுள்ளன. இக்குறிப்புகள் மூலம் இவ்வோவியங்களை வரைந்தவர் யார் என நாம் அறியமுடிகிறது. மூன்று நபர் நிற்கும் ஒரு ஓவிய காட்சியின் கீழ் சித்திர வேலை “சிங்காதனம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வோவியங்களை வரைந்தவர் சிங்காதனம் என நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் இவர் மராத்திய மன்னர் ஆட்சியில் அரசு பணியாளராக இருந்ததனையும் அறிய முடிகிறது.
சிங்காதனத்தால் வரையப்பட்ட இவ்வோவியங்களில் தியாகராஜ சுவாமியின் புராணம், ஆரூரின் விழாக்கள், வாண வேடிக்கைகள், அணிகலன்கள், ஆடைகள், இசைக்கருவிகள், இசைக் கலைஞர்கள், ஆடல் கலைஞர்கள், போன்ற பல குறிப்புகளுடன் மிக அழகாக காட்சியளிக்கின்றன.
தேவாசிரிய மண்டபத்தின் தென்புற வாயிலை ஒட்டிய இரண்டாவது பிரிவில் தொடங்கும் இந்த ஓவியத் தொகுப்பானது. முதல் காட்சியாக தியாக ராஜ புராணமான முசுகுந்த புராணத்தை விளக்குவதாக அமைகிறது.
இசைப்பற்றிய ஓவியங்கள்
இவ்வோவியத் தொகுப்பில் இசை கலைஞர்கள் இசைகருவிகள் இசைப்பது போன்றும் ஒதுவார் போன்ற இசைக்கலைஞர்கள் நிற்பது போன்றும் பல ஓவியங்கள் காணப்படுகின்றன. “துவஜா ரோகணம்” எனக் குறிப்பு காணப்படும். ஓவியத்தில் கொடிக்கம்பத்தின் அருகே தாரைக், கொம்பு, மத்தளம், போன்றவை முழக்கும் காட்சி வரையப்பட்டுள்ளன. இவ்வாறாக விழாக்களை சித்தரிக்கும் ஓவியத்தில் இறை உருவங்களை பவனி எடுத்து வரும் போது தவில், நாகஸ்வரம் இசைக்கப்படுகிறது. எக்காளம் ஊதப்படுகிறது, பறை அறையப்படுகிறது. இதனைத் தொடர்ந்து “மேள வாத்தியக்காரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ள ஓவியத்தில் பல இசைக்கருவிகள் காணப்படுகின்றன. இவ்ஓவியத்தில் நாகஸ்வரம், தவில், கிடிகிட்டி, கர்ணா, முகவீணை சல்லரி, வாங்கா, திருச்சின்னம், பறை, எக்காளம், தாரை, கோணக்கொம்பு, ளு-வடிவ கொம்பு, மகுடி, சங்கு, போன்றவை வீதி உலாவில் இசைப்பது போன்று மிக அழகாக ஒரே ஓவியங்களில் இடம் பெற்றுள்ளன.
இது போல தாழிட்ட இரு கதவினை ஒருவர் திறக்கும் வகையில் அதன் எதிர் திசையில் இருவர் ருத்ராட்சம் அணிந்து பாடிக் கொண்டு இக்கிறார்கள் இவர்களது கீழே “ஒதுவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு வீதியுலா காட்சியில் கின்னரர், தும்புரு, போன்றவர்கள் யாழ் வாசிக்கும் காட்சியானது இடம்பெறுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளில் புல்லாங்குழல் இசைப்பது போன்றும்,
நாகஸ்வரம், தவில், கொம்பு, தாரை, எக்காளம், குடமுழா என்கிற பஞ்சமுக வாத்தியம் இசைப்பது போன்ற ஓவியங்கள் இடம் பெறுகின்றன.
தலையில் சுத்த மத்தளம் இசைக் கருவியினை இசைப்பது போன்ற ஒரு ஓவியம் காணப்படுகிறது. அதன் கீழ் ‘பூதநிருத்தம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாரூர் ஆலயத்தில் பைரவர் பூசையின் போது தலையில் சுத்த மத்தள இசைக் கருவியினை இசைப்பது போன்ற மரபு இருந்து வந்துள்ளது. 300ஆண்டுகளுக்கு முன் இந்த மரபு இருந்ததை நினைவுப்படுத்துகிறது. மேலும் இவ்வாலயத்தில் மரபாக 18க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு வந்துள்ளன. இவைகள் முறையாக எந்தெந்த பூசையில் எவ்வாறு இசைக்கப்படவேண்டும் மெனவும் எந்த இடத்திலிருந்து இவைகள் இசைக்கப்பட வேண்டும் மெனவும் மரபுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான இசைக் கருவிகள் முற்றிலுமாக மறைந்து விட்ட வகையில் இவ்வாலய ஓவிய மூலமாகவே நாம் காண மூடிகிறது.
நடனம் பற்றிய ஓவியங்கள்
முதல் குலோத்துங்கனின் காலத்து கல்வெட்டு ஒன்று திருவாரூர் ஆலயத்தில் காணப்படுகிறது. இக் கல்வெட்டில் திருவாரூர் ஆலயத்தில் பணிபுரிந்த ஆடல் மகளிருக்கு தலைக் கோலி என்ற பட்ட வழங்கிய தியாகேச பெருமானை தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளச் செய்து இறைவன் முன் குலோத்துங்கண் மன்னன் தலைக்கோலி நடனத்தை கண்டு மகிழ்ந்தான். என செய்திகளை தருகிறது. மேலும் தஞ்சை பெருவுடையார் ஆலய கல்வெட்டுகளில் காணப்படும் 400 ஆடல் மகளிர் பெயர்களில் 51 பேர் திருவாரூரைச் சேர்ந்தவர்களாவார்கள் இத்தகைய பெருமை மிக்க இவ்வாலய ஆடல் மகளிர்களுக்கு இவ்வாலயத்தில் பல ஆடல் மரபுகள் ஏற்படுத்தப்பட்டு இவர்களால் வழங்கப்பட்டு வந்துள்ளன. இத்தகைய மரபுகள் சிலவற்றைக் குறிக்கும் ஓவியங்களும், மகளிர்கள் நட்டுவனார் தாளத்திற்கு கேற்ப நடனம் புரியும் வகையிலும் பல ஓவியங்கள் காணப்படுகின்றன.
“முசுகுந்த சக்கரவர்த்தியினுடைய நட்டுவா முட்டுக்கார நாடகசாலை” எனக் குறிப்பிடப்பட்டுள்ள ஓவியத்தில் ஒரு பெண் நடனம் ஆடுவது போன்றும் அருகே நட்டுவனார் நட்டுவதாளம் இசைப்பது போன்றும் மிருதங்கம், மிசைப்பவர், பின்புறம் பாடும், தாளமிடும் ஆண்களும், பெண்களும், நிற்கும் காட்சி இடம் பெறுகிறது, இதுபோல மற்றொரு காட்சியில் முதியவர் ஒருவர் தாளமிட பெண் ஒருத்தி நடணம் புரிகிற காட்சி இடம் பெறுகிறது. மற்றொரு காட்சியில் மேனகை, திலோத்தமை, ஊர்வசி, அரம்பை, எனக் குறிப்பிடப்பட்ட பெண்கள் நடனம் புரிவது போன்றும் அவர்கள் அருகே நட்டுவனார் நட்டுவதாளம் இசைப்பது போன்ற ஓவியம் காணப்படுகிறது இதுபோல் “நாட்டு வா முட்டுக்காரர்” என எழுதப்பட்டுள்ள ஓவியத்தில் நட்டுவனாரும் மிருதங்கம் இசைப்பவரும் இடம் பெறுகின்றன. தொடர்ந்து இரு பெண்கள் ஆடுவதற்கு கீழே நடை நாடக சாலை நடனம் பன்னுகிறது” என காணப்படுகிறது.
இவ்வாறாக” கைக்காட்டு முறைகாரி” எனக் குறிப்பிடப்பட்டுள்ள ஓவியத்தில் ஒரு பெண் கையில் உறம்ச முத்திரை காட்டுவது போன்ற ஓவியம் இடம் பெறுகிறது. திருவாரூர் ஆலயத்தில் தியாகராஜருக்கு பூசை நடைபெறும் பொழுது கர்ப்ப கிரகத்துள் நின்று ஒவ்வொரு பூசை நிகழ்வினை தீட்சிதர்கள் நிகழ்த்தும் போது ஆடல் மகளிர் அவர்கள் அருகே நின்று கையில் அபிநயம் காட்டும் மரபு ஆடல் மகளிரால் கடை பிடிக்கப்பட்ட வந்த மரபாகும். இவற்றினை நினைவுபடுத்து வகையில் இவ்வோவிய மானது காட்சிதருகிறது.
முந்தைகால நினைவுகளை அசை போடும் வகையிலும் நமது காலச்சார பெருமையினை பறைச்சாற்றும் வகையிலும் அமைந்துள்ள திருவாரூர் தேவாசிரிய மண்டப ஓவியங்கள் பல்வேறு சிறப்புகளை சுமந்து இன்றளவும் நமக்கு காட்சியளித்து வருகின்றன. மேலும் இவை இயற்கை பேரிடரால் அழிவை எதிர் நோக்கி உள்ளன. இவற்றை தக்க முறையில் பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். நம் முன்னோர்கள் விட்டுச் சென்றதை நமது சந்ததியினருக்கும் பெருமிதத் தோடு கொண்டு செல்வோமாக.